கொத்தலாவல சட்டமூலம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவிப்பு!

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்..
மேலம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டியுள்ளதாக தாம் நம்புவதால், சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றுக்கு இன்றையதினம் வருகை தந்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் தனது கேள்வியை சமர்ப்பித்துக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதியின் வருகை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|