கொடுப்பனவை அதிகரிக்குமாறு ஓய்வூதியகாரர்கள் ஆர்ப்பாட்டம்!

தங்களது வழங்கப்படுகின்ற கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி, ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்கள் பிரிவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (07) காலை இப்பன்வல சந்தியில் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் தங்களது கொடுப்பனவையும் அதிகரித்துக் கொள்வதே அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் செப்டெம்பர்முதல் ஆரம்பம் - ஜனாதிபதி தெரிவிப்பு!
ஐநாவின் சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்தது - வெளிவிவகார செயலர் தெரிவிப்பு!
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|