கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து – குளிரூட்டல் வாகனம் மோதி விபத்து!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும், குளிரூட்டல் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து கொடிகாமம் – புத்தூர் சந்திக்கு இடையே இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குளிரூட்டல் வாகன சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், பேருந்தில் பயணித்தவர்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே, தனமல்வில ரணவர்னாவ பிரதேசத்தில் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று மின்கம்பத்தில் மோதியதால் மின்கம்பம் முறிந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|