கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு – இதுவரை ஐந்து பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதுவரை ஐந்து பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் சடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக இருந்தமையினால், சடலங்களை எண்ணிக்கை மற்றும் அதனை அடையாளப்படுத்துவதில் சிரமம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், அகழ்வு பணிகளை ஆறாம் நாளாக இன்றையதினமும் முன்னெடுக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்று முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன!
இலங்கை - அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் - 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெ...
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்றுமுதல் ,உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு!
|
|