கைபேசி, இணையத்தளம் ஆகியவற்றால் குற்றம் அதிகரிப்பு – பொலிஸ்மா அதிபர்!
Thursday, December 27th, 2018
இணையத்தளங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பவற்றைப் பயன்படுத்தி இடம்பெறும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கைத்தொலைபேசி மற்றும் கணினிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இதுபோன்ற அச்சங்களின்றி அனைத்து பிரஜைகளும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்வதாக பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
முறைப்பாடுகளை முறையிட மின்னஞ்சல் - தேர்தல்கள் ஆணைக்குழு !
யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பம் - யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்!
சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
|
|
|


