கைக்குழந்தையை கை விட்டு தலைமறைவான பெண்!

Friday, November 24th, 2017

பத்து மாதங்களான கைக்குழந்தையை தவிக்கவிட்டு பெற்றதாய் தலைமறைவான சம்பவம் ஒன்று வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில்இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசித்து வந்த சௌந்தராஜன் துக்சிகா என்ற பெண்ணே கணவரையும், கைக்குழந்தையையும் கை விட்டு தலைமறைவாகியுள்ளார். இது பற்றி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட குறித்த பெண் கண்டி பிரதேசத்தை சேர்ந்த சௌந்தராஜன் என்ற நபரை காதலித்து திருமணம்முடித்துள்ளார். குறித்த பெண்ணின் தாயார் குழந்தை பிறந்ததன் பின் வவுனியா வந்து தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்து கூட்டிச்சென்றுவிட்டதாக சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி முதல் தன்னையும், குழந்தையையும் தவிக்க விட்டு தனது மனைவி சென்றுவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடிக்க பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  பால்மணம் மாறாத குழந்தை தாய்க்காக ஏங்கி அழுவதாகவும், ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ஊராக சென்று மனைவியைத் தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த பெண்ணை யாராவது கண்டால் 076 – 3219514 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts:


சேதனப்பசளைத் திட்டத்ததால் இவ்வருட இறுதிக்குள் விவசாயிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் – ஈ.பி.டி...
வழமைபோன்று விவேகமிழந்தவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றும் உள்ளனர் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...
கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டுள்ளோம் - புதிய பொருளாதாரத்தை நோக்கி செல்லாவிட்டால் மீண்டும்...