குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – தேசிய நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சமித்த கினிகே அறிவிப்பு!

15 வயது வரையான குழந்தைகளுக்கு கட்டாயமாக போடப்படும் தடுப்பூசிகளை போட வேண்டும் என தேசிய நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சமித்த கினிகே கூறுயள்ளார்.
அத்துடன், தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் 15 வயது வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
தேசிய நோய்த்தடுப்பு திட்டத்துக்காக கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை மட்டுமே எனவும், நோய் தடுப்புக்காக உரிய தடுப்பூசிகளை பிள்ளைகளுக்கு வழங்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சுயதொழிலை மேம்படுத்த உதவித்திட்டங்களை பெற்றுத்தாருங்கள்: நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள்...
விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் 17 வகையான விதைகள் கண்டுபிடிப்பு!
நாடு முழுவதும் இன்றுமுதல் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் விசேட ஆய்வு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவி...
|
|