குள்ள மனிதர்கள் அச்சுறுத்தல் – நேற்றும் வட்டுக்கோட்டையில் பதற்றம்!
Friday, August 3rd, 2018
வட்டுக்கோட்டை முதலி கோவிலடியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை குள்ள மனிதர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரிய வருவதாவது:
நேற்று இரவு 7.00 மணியளவில் வட்டுக்கோட்டை முதலி கோவிலடியிலுள்ள வீட்டுக்குள் உள்நுழைந்த குள்ள மனிதர்கள் அந்த வீட்டின் மீது சரமாரியான கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வீட்டுக்காரர் வெளியே வந்து பார்த்தபோது அவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர். இதேபோன்று வட்டுக்கோட்டை முதலிகோவில் பகுதியில் உள்ள ஏனைய வீடுகளிலும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவுவதாகவும் வீட்டிற்கு வெளியே வரமுடியாத நிலை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
முச்சக்கர வண்டிகளுக்கு தனியான அதிகார சபை!
மழை பெய்யும் என எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!
இலங்கையில் மீன் கொள்வனவுக்கும் QR நடைமுறை - வெளியான அறிவிப்பு!
|
|
|


