குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்பு – பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் பம்பலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்குபற்றிய போது கூறியுள்ளார்.
மேலும், குற்றச் செயல்களை மேற்கொள்வோருடன் தொடர்பு பேணும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அஞ்சப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பாதாள உலகக் குழு தலைவர் ஹரக் கட்டா எனப்படும் நதுன் சம்பவத்துடன் நெருங்கிய தொடர்பு பேணிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்!
இலங்கைக்கு உதவும் பில் கேட்ஸ்!
இலங்கையில் கையடக்கத் தொலைபேசி இணையத்தள பாவனை அதிகரிப்பு!
|
|