குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்து உள்நாட்டு அரிசியுடன் கலந்து அதிக இலாபம் பெறும் அரிசி ஆலை உரிமையாளர்கள் – அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன குற்றச்சாட்டு!
Friday, July 1st, 2022
முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஏனைய அரிசி ஆலை உரிமையாளர்கள் வெளிநாட்டு அரிசியைக் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து, உள்நாட்டு அரிசியுடன் கலந்து அதிக விலைக்கு விற்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்னும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அரிசி கையிருப்பு இருப்பதாகவும், அவற்றை அரசாங்க உத்தரவாத விலையில் விற்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய இயற்கை விவசாயத்தினால் நாட்டின் நெற்செய்கை அழிந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும், ஒரு தொழிலதிபர் என்ற வகையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தனது பங்களிப்பைச் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விபத்துக்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காண்பதற்கு சி.சி.ரி.வி!
குண்டுவெடிப்பு சம்பவவம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
'தாமரைக் கோபுரம்' பிரதேசம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி இலங்கை - சிங்கப்பூர் உடன்படிக்கை கைச்சாத்து எ...
|
|
|
GSP+ வரிச்சலுகை நாட்டிற்கு கிடைப்பதையிட்டு சில அரசியல் நயவஞ்சகர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் - பி...
சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை -சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்...
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றையதினம் வழங்கப்பட்டது - உள்நாட்டலுவல்கள் அமை...


