குறுங்கால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்றுமுதல் தடை – மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவிப்பு!
Sunday, October 1st, 2023
ஒரு முறை மற்றும் குறுங்கால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று முதல் தடைவிதித்து இன்று வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய உறிஞ்சு குழாய்கள் (ஸ்ட்ரோவ்), கத்திகள் கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள், தட்டுகள், கோப்பைகள், ப்ளாஸ்டிக் மாலைகள் மற்றும் இடியப்பத் தட்டுகள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்தல் விற்பனை செய்தல், இலவசமாக அல்லது கண்காட்சிக்காக வழங்குதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் தலைவர் சுபுன். எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், இன்று முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


