குறுகியகால இடைவெளியில் மீண்டும் உயர்தர பரீட்சைக்கு தயாராவது கடினம் – கல்வி அமைச்சிடம் மாணவர்கள் கோரிக்கை!
Monday, September 11th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின், வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், 2 மாதங்களில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சைக்கு தயாராவது கடினம் என மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பரீட்சைக்குத் தயாராவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதாது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில், கல்வி அமைச்சிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குப்பைக்கூளங்களை அகற்றுவது தொடர்பில் பிரதமர் கருத்து!
எவரும் நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை - ஞானசார தேரர்!
மக்களுக்கு தேவையான தடுப்பூசியை வழங்க அரசாங்கத்தால் முடியும் - சுகாதார அமைச்சர் பவித்திரா உறுதி!
|
|
|


