குருந்தூர்மலை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

Sunday, July 16th, 2023

“குருந்தூர்மலை ஒரு வழிபாட்டிடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்..

குருந்தூர்மலையில் நேற்றுமுன்தினம் வழிபடச் சென்ற தமிழ் மக்கள், பிக்குகள் – சிங்கள மக்கள் – பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார்..

அவர் மேலும் கூறுகையில் –

“குருந்தூர்மலை விவகாரத்தை வைத்து ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர். இன்னொரு தரப்பினர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர். இவையிரண்டும் தற்போதைய நிலைமையில் தேவையற்றவை.

குருந்தூர்மலை வழிபாட்டிடம். அங்கு எவரும் சென்று வழிபடலாம். இந்தநிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பது எமது கடமை. சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடனும் நாம் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொடுப்போம்.” – என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

குடாநாட்டு மக்களிடம் யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் தி...
வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் இ...

5 நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதியில்லை - விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தி...
மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின்னல் தாக்கமே காரணம் - மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெ...
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தொடரப்படுகின்றது வழக்கு - மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!