குருதி சீராக்கத்திற்கான உபகரண பற்றாக்குறை விரைவில் நிவர்த்திக்கப்படும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!

குருதி சீராக்கத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை நாளை அல்லது நாளைமறுதினம் நிவர்த்திக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் தயாசிரி ஜயசேகர முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டி மற்றும் கல்கமுவ உள்ளிட்ட மேலும் சில வைத்தியசாலைகளில் குருதி சீராக்கத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமையினால் பலரும் மரணிக்கின்றனர் என தயாசிரி ஜயசேகர சபையில் குற்றம்சாட்டினார்.
அத்துடன், இதனை நிவர்த்தி செய்வதற்கு விலை மனுக்கோரல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதிலும் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இதற்கு சுகாதார அமைச்சின் நிர்வாகமே காரணமாகும். பலமாதங்களாக மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதற்கு சுகாதார அமைச்சரால் தீர்வொன்றினை வழங்க முடியுமா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர வினவினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, வைத்தியசாலைகளில் குருதி சீராக்கத்திற்கான மருத்துவ பொருட்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதை ஏற்றுக்கொள்கின்றேன்.
நாளை அல்லது நாளைமறுதினம் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிதன் பின்னர் அதற்கான தீர்வு முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|