குண்டுவெடிப்பின் எதிரொலி – விளையாட்டுப் பயிற்சிகளும் இடைநிறுத்தம்!

Tuesday, May 7th, 2019

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில்கொண்டு பாடசாலை நிறைவடைந்த பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் எம். எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எம்.எம். ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

Related posts: