குண்டுவெடிப்பின் எதிரொலி: இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்!

நாட்டில் பல பாகங்களில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்கதலின் எதிரொலியாக நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு அமைய இந்த ஊரடங்கு சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
நிறைவேற்று அதிகார முறைமை இரத்து செய்யப்படும் - பிரதமர்!
தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபா!
குறைந்த வட்டியின் கீழ் வீட்டை கொள்வனவு செய்வதற்காக கடன் - நகர அபிவிருத்தி அதிகார சபை!
|
|