குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நாளை விடுமுறை!

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு நாளை விடுமுறை விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை புஞ்சிபொரளையில் தற்போது உள்ள இந்த அலுவலகத்தை பத்தரமுல்லைக்கு மாற்றும் நடவடிக்கையே இதற்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நாளையதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்படகின்றது.
இதன் காரணமாக கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள திணைக்களத்தின் கிளைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் 2018
பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!
அச்சிடுவதற்கு போதிய இயந்திரம் இல்லை - 8 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் தேக்கம் என போக்குவரத்த...
|
|