குடாநாட்டில் நிலவும் நீர்தட்டுப்பாட்டுக்கு தீர்வு!
Sunday, September 24th, 2017
மழை நீரை பாதுகாப்பாக சேமித்து பயன்படுத்துவதற்கான புதிய பொறியியல் திட்டமும் தயாரிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமராட்சி களப்பு பிரதேசத்தில் 78 சதுர கிலோ மீற்றர் பகுதியில் வருடாந்தம் கிடைக்கும 20 சதவீதமான மழை நீரைப் பாதுகாத்து அதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. செயற்றிட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சரினதும் வடமாகாணசபையினதும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நீர்பாசன அமைச்சின் ஒய்வு பெற்ற செயலாளரும் திணைக்களத்தின் பணிப்பாளருமான வித்தியாசோதி பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்த்தன வழிகாட்டலில் இதன் பணிகள் முன்னெடுக்கப்படும். பிரதமரினால் நியமிக்கப்பட்ட வட மாகாண அபிவிருத்திக்குழு மற்றும் கொள்கைத்திட்டமிடல் அபிவிருத்தி அலுவலகம் இந்த திட்டத்தின் முனனேட்டத அவதானிக்கப் பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுவிட்ஸர்லாந்தில் இலங்கை தமிழர் படுகொலை!
கடும் வறட்சி : 25005 குடும்பங்கள் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் அவசியம் - நிரோஷன் திக்வெல்லவுக்கு தெரிவுக் குழுத் தலைவ...
|
|
|


