குடாநாட்டின் 38 இடங்களில் டெங்கு நோய் அறிகுறிகள்!
Saturday, January 26th, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 38 இடங்களில் டெங்கு நோய் என்று சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் வாரத்துக்கு வாரம் அதிகரிப்பதும் குறைவதுமான நிலை காணப்படுகின்றது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வீட்டுக்கு வீடு பயணத்தை ஆரம்பித்து சோதனை மற்றும் அறிவுறுத்தல் வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
சாதாரண காய்ச்சல், சோம்பல், பசியின்மை, தலையிடி போன்ற அறிகுறிகள் உடலில் காணப்படுவோர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த வாரம் கிடைக்கப்பெற்ற அறிக்கையின் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 38 இடங்களில் டெங்கு நோயாக இருக்கலாம் என்று சந்தேகத்தில் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதி, பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி, ஸ்ரேசன் வீதி, கொக்குவில், இணுவில், ஆனைப்பந்தி, நாவலர் வீதி, கோண்டாவில், சாவற்காடு, ஆனைக்கோட்டை, ஓட்டுமடம், கலட்டி அம்மன் கோவில் வீதி, வைமன் வீதி, நல்லூர், சுதுமலை, மானிப்பாய் உள்ளிட்ட 38 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Related posts:
|
|
|


