குடாநாட்டின் பல பகுதிகளில் கடல் நீர் உள்வாங்கல் : பதற்றத்தில் மக்கள்!

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களோ விளைவுகளோ ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை தீவுகள் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளில் இருந்த நீர் உள்வாங்கியதால் குறித்த பகுதி மக்கள் பதற்றமடைந்திருந்தனர்.
கஜா புயலின் தாக்கத்தால் குறித்த சில பகுதிகளில் உள்ள கடல்நீர் உள்வாங்கியதாகவும் அது பின்னர் வழமைக்கு திரும்புவதாகவும் இதனால் எவ்வித விளைவுகளோ அல்லது ஆபத்துக்களோ இல்லையெனவும் பொதுமக்கள் இதுகுறித்த பெரிதுபடுத்திக்கொள்ள தேவையில்லையெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
இந்திய - இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்!
திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் இரத்து - கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர்!
எமது கடல் வளங்களையோ கடற்பரப்புக்களையோ இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் வழங்குவதை அமைச்ச...
|
|