குஜராத்தில் இலங்கையர்கள் கைது – உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரச புலனாய்வு பிரிவு!

Tuesday, May 21st, 2024

குஜராத் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அணியால் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூறப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பிலும்  இலங்கையின் அரச புலனாய்வு பிரிவினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், நேற்றுமுன்தினம் (19.05.2024) இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, கைதானவர்களின் பின்னணி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் வலையமைப்புடனான தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக  இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவின் அரச புலனாய்வுத் துறையிடமிருந்து கூடுதல் தகவல்களை கோரியுள்ளனர்.

இந்தியாவிடம் இருந்து தகவல் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நால்வரும் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அகமதாபாத் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: