கீதாவின் பாராளுமன்ற இரத்து விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்தது!

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச்செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடைநிறுத்தம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தீர்ப்பிற்கு எதிராக கீதா குமார சிங்க தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதவான் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதேபோல் , அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 15ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.புவனெக அலுவிகாரே , பிரியந்த ஜயவர்தன , அனில் குணரத்ன போன்ற உயர்நீதிமன்ற நீதவான் குழு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனர்த்தம் நிலவும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பான அதிகாரம் அதிபர்களுக்கு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு!
யாழில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு தினத்தை பிரகடனம் செய்த யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
|
|