கிழக்கில் ஆட்கடத்தலை தடுக்க பொறிமுறை ஒன்று அவசியம் – ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆலோசனை!

Wednesday, October 26th, 2022

ஆட்கடத்தலை தடுப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் விசேட பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

மாகாண தலைமை செயலாளர் தலைமையில் அந்த பொறிமுறையை உருவாக்க வேண்டுமென ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் ஒத்துழைப்பையும் அதற்காக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

” ஆட்கடத்தலுக்கு எதிராக அரசு மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் அதிகளவு அழுத்தத்தை ஏற்படுத்தல்” என்னும் தொனிப்பொருளில் எம்கோர் நிறுவனத்தால் திருகோணமலையில் அமைந்துள்ள தலைமை செயலாளர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ஆட்கடத்தலை தடுப்பதற்காக எம்கோர் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவரால் அங்கு தெளிவுபடுத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் ஆட்கடத்தலை தடுப்பதற்காக அரசு அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தல், பாதிக்கப்பட்டவர்களை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் குறித்து அங்கு அவர் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: