கிளிநொச்சி மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்!
Thursday, August 1st, 2024
கிளிநொச்சி மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் நேற்று (31) நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், குறித்த திட்டங்களின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், தடைப்பட்டுள்ள திட்டங்களை முன்னகர்த்திச் செல்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, இந்த கூட்டத்தில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உள்ளக கணக்காய்வாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
000
Related posts:
|
|
|


