கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ !

கிளிநொச்சி பொது சந்தை தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளதாகவும், இதனால் 40 இற்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் குறித்த தீயை அனணப்பதற்காக தீயைணைப்பு வாகனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் கடை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த தீயணைப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரமுடியவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
நடிகர் சோ ராமசாமி காலமானார்!
பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
மறு அறிவித்தல்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் – இராணுவத்தளபதி...
|
|