கிளிநொச்சியில் புரவிப் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதனால் வழங்கிவைப்பு!

Wednesday, January 13th, 2021

கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவுககுட்பட்ட புரவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டுக் காசோலைகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் வழங்கிவைத்தார்.

முன்பதாக கிளிநொச்சியில், கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒரே நாளில் 5 வீடுகளும், நான்கு இடங்களில் பழமரக்கன்றுகளும், புரவிப் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடுகளும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர்களால் வழங்கிவைக்கப்பட்டன.

கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு பழமரக்கன்றுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழவின் கரைச்சி பிரதேச செயலக இணைப்பு உத்தியோகத்தர் கருணாகரன், மற்றும் கிராமசேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் பங்குபற்றினர்.

தொடர்ந்து, உருத்திபுரம் மேற்கு மற்றும் பெரிய பரந்தன் பகுதிகளில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வுகளில், கரைச்சிப் பிரதேச செயலாளர் ஜெயகரன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் சுபாஷ், வீடமைப்பு அதிகாரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மற்றும் கரைச்சிப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு இணைப்பு உத்தியோகத்தர் கருணாகரன் ஆகியோருடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உருத்திபுரம் மேற்கு வட்டாரங்குழு இணைப்பாளர் ஜெயகரனும் கலந்துகொண்டிருந்தார்.

இதேவேளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோவில்வயல், இயக்கச்சி மற்றும் மாசார் கிராமசேவையாளர் பிரிவுகளில் தேசிய வீடமைப்ப அதிகாரசபையினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வீடுகளை உத்தியோகபூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தார். . வீடுகள் கையளிப்பு நிகழ்வுகளுடன் இணைந்ததாக, கோவில்வயல், இயக்கச்சி மற்றும் மாசார் கிராமசேவையாளர் பிரிவுகளில் மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பழமரக்கன்றுகள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் தலைமையிலான மேற்படி குழுவினரால் பயனாளிகளுகு்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: