கிளிநொச்சியில் இராணுவ வாகனம் கோர விபத்த்து!

கிளிநொச்சி 55ஆம் கட்டை காளி கோயிலடி பகுதியில் புகையிரதத்துடன், இராணுவ வாகனம் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி இராணுவ வீரர்கள் அறுவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மேலும், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகையிரத பாதுகாப்பு கடவையில் இருந்த சமிக்ஞை வேலை செய்யாத நிலையில், புகையிரத பாதையை கடந்த கனரக இராணுவ வாகனம் கொழும்பிலிருந்து பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோதியுள்ளது.
இறந்த இராணுவத்தினரின் உடல்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
வரி மோசடியாளர்களை முறையாகக் கண்டறிய நடவடிக்கை - நிதியமைச்சர்!
யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு - யாழ்ப்பாண பிரதான புகையிரநிலைய அதிபர்!
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலேயே நடைபெறும் - கல்வி அமைச்சின் செய...
|
|