கிரிக்கெட் சபையிடமிருந்த ஆவணங்கள் கையேற்பு – சிறப்பு பொலிஸ்!
Sunday, June 28th, 2020
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெற் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்டத்தை ‘ இலங்கை விற்றுவிட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த உலக கிண்ண போட்டித் தொடர் தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விசேட விசாரணைப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விசேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகாவின் ஆலோசனைக்கு அமைய கிரிக்கெட்சபையின் தலைமையகத்துக்கு சென்ற சிறப்புக் குழு இந்த ஆவணங்களைப் பொறுப்பேற்றுள்ளது
Related posts:
கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்ற நடவடிக்கை !
இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகளை மீள ஆரம்பிப்பேன் - ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!
சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமு...
|
|
|


