கிராமசேவை உத்தியோகத்தர்களின் சம்பளம் 2020 இல் அதிகரிக்கும் – அமைச்சர் வஜிர தெரிவிப்பு!

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளமும் 2020 ஆம் ஆண்டாகும்போது இன்னும் அதிகரிக்கும். இதன்படி மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு 28,940 ரூபாயும் இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு 32,290 ரூபாயும் முதலாம் நிலையில் உள்ளவர்களுக்கு 36,000 ரூபாயாகவும் அதிகரிக்கும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 1,650 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்ததாவது:
நாட்டின் அரச சேவையை நல்லாட்சி அரசு போன்று வேறு எந்தவொரு அரசும் பலப்படுத்தவில்லை. வேறு ஆட்சிக் காலத்திலும் அதிகரிக்கப்படாத அளவுக்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை பன் மடங்காக அதிகரித்தோம்.
அத்துடன் கிராம உத்தியோகத்தர்களை வழி நடத்தும் வகையில் அந்த சேவைக்கு யாப்பொன்று இல்லை. கிராம உத்தியோக சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்களுக்கான யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கிராம உத்தியோகத்தர் சேவை யாப்பு விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த யாப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டு அவரின் அனுமதி பெறப்பட்டதுடன் தற்போது அதனை நாம் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கையளித்துள்ளோம். இதன்படி விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்போம் என்றார்.
Related posts:
|
|