“காஸ்” விலை உயருமா?
Thursday, September 14th, 2017
சமையல் எரிவாயுவின் விலைகளில் அதிகரிப்புச் செய்வது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. எரிவாயுவின் விலை நூற்றுக்கு எட்டுவீதத்ததால் அதிகரிக்கப்படவேண்டுமென அமைச்சரவையில் முன் மொழியப்பட்போதிலும் பல அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். சிலர் இதனை ஐந்து வீதமாக அதிகரிக்கலாம் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ,சரியான தீர்மானமொன்றை எடுப்பதற்காக இந்த விடயத்தை மீண்டும் ஆராய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளை 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஆரம்ப கட்ட முன் மொழி யோசனைகளும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
Related posts:
பயங்கரவாத தாக்குதலின் எதிரொலி; முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை!
கொவிட் நிதி வேறு எதற்கும் பயன்படுத்தமாட்டாது – அமைச்சர் நாமல் உறுதி!
நீண்ட கால மின் உற்பத்தி திட்டம் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
|
|
|


