காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வெளியானது அறிவிப்பு!

Saturday, August 10th, 2024

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மி.மீ க்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது. 

000

Related posts: