கடந்த காலங்களில் கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட பெரும்பணிகள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது – வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் ஆதங்கம்!
Monday, June 22nd, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட வேலைத் திட்டங்கள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியன் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் யாழ். தேர்தல் மாவட்டத்தில் இலக்கம் 1 இல் போட்டியிடுடும் வேட்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீ ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பச்சிலைப்பள்ளி பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 3 ஆசனங்களுடன் நாடாளுமன்றம் சென்ற எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா யுத்தத்தால் முழுமையாக இடப் பெயர்வுகளையும் பாதிப்புக்களையும் சந்தித்த கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல்வேறு அமைச்சுக்களினூடாக பத்திரம் சமர்ப்பித்து அழிந்துகிடந்த இப்பிரதேசத்தை மீளவும் கட்டியெழுப்பினார்.
குறிப்பாக கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுர திறப்பு விழாவுக்கு வருகைதந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தி புலிகளின் தளமாக இருந்து இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த அறிவியல் நகரை விடுவித்து அதில் பல்கலைக் கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை அமைத்திருந்தார்.
அதேபோன்று மீள் குடியேற்றம் என்ற விடயத்திற்குள் அடங்கியிருந்த கிளிநெச்சி மாவட்ட செயலகம் உள்டளிட்ட பல்வேறு சமூக கட்டமைப்பக்களை மக்களுக்கு அமைத்தக்கொடுக்க அயராது உழைத்தார்.
2000 ஆம் அண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பச்சிலைப்பள்ளி மக்கள் இடம் பெயர்ந்து குடாநாட்டின் பல பகுததிகளிலும் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்திருந்தபோது அவர்களது அடிப்பட்ட தேவைகளை நிறைவேற்றுவதிலும் அயராது உழைத்தார்.
ஆனால் இன்று அமைச்சரவர்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது அவதானிக் முடிகின்றது. எனினும் எமது மக்கள் பணி தொடர்ந்த வண்ணமே இருக்கும். அதற்கான ஆதரவையும் பங்களிப்பையும் நாம் உங்களிடம் எதிர்பார்கிக்னறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


