காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி – பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா!
Saturday, August 27th, 2016
தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு 2025ஆம் ஆண்டளவில் காற்றுச் சக்தி மற்றும் சூரிய சக்தி மூலம் 20% மின்சாரத்தை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார் மேலும் புதிய திட்டமாக இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதாகவும், இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக 2025ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்புக்கு 1000 மெகாவோல்ட் கொள்ளளவு மின்சாரத்தை இணைத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இந்த புதிய வேலைத்திட்டத்திற்கு அவசியமான தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை முறையான தொழில்நுட்பத்தில் கீழ் வழங்குவதாகவும் அவர் கூறினார். இதனூடாக தேசிய மின் கட்டமைப்பின் மின் உற்பத்திக்கான செலவுகளை மீதப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் செப்டம்பர் 06ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


