காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து குறைவடையும்!

Monday, July 22nd, 2019

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:


பருத்தித்துறையின் அபிவிருத்தி பின்தங்கியமைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினரே -  ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்...
ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு - 21 ஆவது திருத்த சட்டமூலம்...
நாடு முழுமையாக இன்னும் மீளவில்லை - முக்கியமான சீர்திருத்தங்களை எந்தவகையிலும் மாற்றியமைக்கக் கூடாதென ...