காரைநகரில் மினி சூறாவளி – குடிசை மீது விழுந்தது பனை மரம் – சிறுவனொருவன் காயம்!

Tuesday, June 25th, 2024

யாழ்ப்பாணம் காரை நகர் பகுதியில் பனை மரம் ஒன்று அருகில் உள்ள குடிசை ஒன்றின் மீது விழுந்ததால் சிறுவனொருவன் காயமடைந்துள்ளான். இந்த சம்பவம் நேற்றையதினம் (24)  இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று மாலை திடீரென வீசிய பலத்த காற்றினால், காரைநகரில் உள்ள  களபூமி பகுதியில் உள்ள பனைமரமொன்று முறிந்து, அருகில் இருந்த ஓலைக்குடிசை மீது வீழ்ந்தது. அந்தக் குடிசைக்குள் 4 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பமொன்று வசித்து வந்தபோதும், தெய்வாதீனமாக பாரதூரமான பாதிப்புகளின்றித் தப்பினர்.

எனினும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதை யடுத்து, அவர் பிரதேச மருத்துவமனை யில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: