காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோரிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி கோரிக்கை!
Thursday, November 18th, 2021
மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்றும் பெற்றோர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லவும் வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தாக்கத்தால் இடைநிறுத்தப்பட்ட இலங்கக்கான பயண எச்சரிக்கையை தளர்த்தியது பிரித்தானியா!
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் பாரதப் பிரதமர்!
தலைவர் பதவிக்கு சுமந்திரன் ஶ்ரீதரன் இருமுனைப் போட்டி – முக்கிய உறுப்பினர்களுக்குள் வலுப்பெற்றுள்ள மு...
|
|
|


