காப்பீட்டு இழப்பீட்டையாவது பெற்று தர வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

கொரோனா பரவல் காரணமாக தனியார் பேருந்து தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் காப்பீட்டு இழப்பீட்டையாவது பெற்று தருவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேருந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையிலும் காப்பீட்டு கட்டணங்கள் உரிய முறையில் செலுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொவிட்-19 காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் கையொப்பமிட்டுள்ள கடன் தொகைகளுக்காக மாதாந்தம் அதிக தொகை செலுத்துவதற்கு நேரிட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துபவர்களின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் அசங்க ருவான் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|