காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவிப்பு!

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நிறுவனங்களுக்குச் சொந்தமான விவசாயம் செய்யப்படாத காணிகளை சுவீகரித்து மீண்டும் பயிர்ச்செய்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 3 மாணவர்கள் கைது!
யார் எதிர்த்தாலும் நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி!
தாமரைக் கோபுரத்தை பார்வையிட நேற்று 2612 பேர் வருகை - முதல் நாளிலேயே 15 இலட்சம் வருமானம் எனவும் தெரி...
|
|