காணாமல் போயிருந்த பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு !
Saturday, April 25th, 2020
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினரான இ.செந்தூரன் என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மோட்டார் சைக்கிள், ஆள் அடையாள அட்டை, நிறுத்தப்படட நிலையில் கைத்தொலைபேசி, முகக்கவசம் என்பன வல்வெட்டித்துறை மயிலியதனைப் பகுதி கடற்கரையோரமாக நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிசாரால் மீட்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
சமுர்த்திக் குடும்பங்கள், மீனவர்களுக்கும் பழைய விலையில் மண்ணெண்ணெய்!
புலிகள் தொடர்பிலான சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
|
|
|


