காணாமல் போனோர் விசாரணைகள் நிறைவு.!
Monday, June 20th, 2016
நாட்டில் நடந்த யுத்தம் காரணமாக காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குறித்த குழு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததோடு, குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!
“சவாலை தெரிவு செய்யுங்கள்’ - அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மஹிந்த!
இலங்கையின் உள்நாட்டு சந்தையில் புதிய எரிபொருள் சந்தை ஆரம்பம் - சினோபெக் நிறுவனத்துடன் மே மாதம் கைச்ச...
|
|
|


