காணாமல் போனோர் அலுவலகம்: உறுப்பினர்களை நியமிக்கும் பணி ஆரம்பம்!
Wednesday, October 25th, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக உறுப்பினர்களை தெரிவு செய்ய அரசியல் அமைப்பு சபையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.விண்ணப்பதாரிகள் உண்மை கண்டறியும் நடவடிக்கைகளில் முன் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் என அரசியல் அமைப்பு சபையின் பதில் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இது தவிர, மனித உரிமைகள் சட்டம், மனித உரிமைகள் சர்வதேச சட்டம் உட்பட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.விண்ணப்பங்கள் நொவம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் அமைப்பு சபையின் பதில் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
பாடசாலை மாணவர்களில் 20வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிப்பு!
மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவுறுத்...
கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிரங்கள் - உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்து!
|
|
|


