காணாமல்போனோர் சான்றிதழ் வருட இறுதிக்குள் – அரசாங்கம் !

Thursday, July 28th, 2016

நாட்டிலேற்பட்ட யுத்தத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் பல்வேறு செயற்பாடுகளினால் காணாமல் போனவர்களை காணாமல் போனோர் என்று உறுதிசெய்து அதற்கான சான்றிதழை வழங்கும் நடவடிக்கை இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடக்கு, கிழக்கில் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் குறிப்பிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களது யோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும் என்று உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நாளை மறுதினம் முன்னெடுக்கவுள்ள நடமாடும் சேவை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள உள்விவகார அமைச்சில் இன்று(28) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் வஜிர அபேவர்தன, காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கும் காணாமல் போனமையை உறுதிசெய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:

இன, மதம் அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிகளை பதியாதிருக்க தீர்மானம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவ...
ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியை பொறுப்பேற்ற பின் கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் இடம்பெற்றதாக வரலாறு இல்லை ...
யாழ் முற்றவெளியில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விழா - இலங்கை விமான படையின் தளபதி எயார் மாஷல் உ...