காடுகள் அழிக்கப்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கை – விவசாய அமைச்சு!

வனவிலங்குகள் மூலம் காடுகள் அழிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மக்களிடமும், புத்திஜீவிகளிடமும் கருத்துக்களைக் கோர எதிர்பார்த்துள்ளது.
நாட்டிலுள்ள காட்டின் பரப்பளவிற்கு இணைவாக இருக்க வேண்டிய விலங்குகளின் அளவு தொடர்பான எதுவித ஆய்வும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனினும், விவசாயிகள் மேற்கொள்ளும் பயிர்ச் செய்கைகளுக்கு விலங்குகள் மூலம் ஏற்படும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதனால், தமது விவசாய நிலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டமொன்றை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.
தற்போது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சிற்கு வழங்கி வருகின்றன.
இந்தத் தகவல்களுக்கு அமைய, காட்டுப் பன்றிகள், குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள், காட்டு யானைகள் என்பவற்றால் கூடுதலான பயிர்ச் சேதங்கள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.விவசாயிகளின் இந்த பிரச்சினைகளுக்குரிய நிரந்தர தீர்வாகக் கருதும் யோசனைகளை முன்வைக்குமாறு புத்திஜீவிகளும் பொதுமக்களும் கேட்கப்பட்டுள்ளனர். 0112-872-094 என்ற தொலைநகல் இலக்கத்தின் வாயிலாக தகவல்களை வழங்க முடியும்.
Related posts:
|
|