காங்கேசன்துறை – கொழும்பு சேவையை ஜன.30 ஆரம்பிக்கிறது உத்தரதேவி!

உத்தரதேவி ரயிலின் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சேவை எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களத்தால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட புதிய ரயில் காங்கேசன்துறை – கொழும்பு ரயில் மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக ஈடுபடுத்தப்படவுள்ளது.
குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு ரயிலான உத்தரதேவி கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான நிரந்தர சேவையை எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.
Related posts:
விஜயகலாவை பதவி விலக்குமாறு பிரதமர் அறிவிப்பு!
காய்ச்சல் - உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் பலி!
அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் - உலக நீர் தின நிகழ்...
|
|