கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் விருப்பத்திற்கேற்ப திறமைகளை வெளிப்படுத்தும் பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தேவையான பின்னணி தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இஸ்ரேலுக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் !
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதில்லை - சீனா !
பதிலடி கொடுக்க தயார் - முற்றுகையிட்டுள்ள போர்க்கப்பல்கள் - சீனா அமெரிக்கா இடையே வலுக்கும் போர் பதற்ற...
|
|