கல்விச் சேவைக் குழுவிற்கு மீண்டும் அதிகாரம் !

கல்விச் சேவையிலுள்ள நியமனங்கள், பதவி உயர்வுகள் போன்ற நடவடிக்கைகளுக்காக கல்விச் சேவைக்குழு மீண்டும் அதிகாரமுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரசசேவை ஆணைக்குழுவிடம் இருந்த அதிகாரம் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி முதல் இந்தக்குழு மீண்டும் செயலுருவம் பெற்றுள்ளது. இதன்பின்னர் நடைபெறும் சகல கல்வித்துறை நடவடிக்கைகளின் போதும் இக்குழுவை நாடுமாறு கல்விச்சேவை ஆணைக்குழு, கல்வி அமைச்சுக்கு தெரிவித்துள்ளது. இக்குழுவில், கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.என்.டீ. பண்டார தலைவராகவும், செயலாளராக டபிள்யூ.எச்.எச்.டீ.கே தயாரத்னவும், ஏனைய உறுப்பினர்களாக ஆ.எச்.எம்.சீ. அல்கடுவவும், எல்.மொஹமட் தம்பி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த அரசாங்கத்திலும் இக்குழு காணப்பட்டிருப்பினும், அதிகாரம் அரச சேவை ஆணைக்குழுவிடம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|