கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை – மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்து!
Sunday, November 26th, 2023கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் நேற்று (24.11.2023) இடம்பெற்ற இணையவழி சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், கல்விசாரா ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியோரின் கலந்துரையாடலைத் தொடர்ந்து, நவம்பர் 24, 2023 க்குள் ஒப்புக்கொள்ளப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு தீர்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பொதுத் தேர்தலே தீர்வாக அமையும் -முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச!
ஓகஸ்ட் - டிசம்பர் மாதங்களில் பாடசாலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
இருபது இலட்சம் பேரின் சலுகைக்காக 2 கோடி பேரை கஷ்டத்தில் வீழ்த்துவதா - ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன...
|
|
|


