கல்லுண்டாய் வீதியில் கோர விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
Thursday, June 29th, 2023
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியை அண்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றையதினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் அம்புலன்ஸ் வண்ணமூலம் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.
இந்நிலையில் கறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் - அரசாங்கம் அனுதாபம் வெளியிட்டுள்ளது!
வடக்கின் விவசாயம் மற்றும் கல்வி பதில் அமைச்சராக விக்கினேஸ்வரன் பதவி பிரமாணம்!
கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு புதிய போக்குவரத்து கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்...
|
|
|


