கலைப்பீட கற்றல் நடவடிக்கைகளை மீள் ஆரம்பிக்குமாறு மாணவர் ஒன்றியம் கோரிக்கை!
Wednesday, March 15th, 2017
மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ள கலைப்பீட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் நிர்வாகத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய முறையில் விசாரணை நடத்த மாணவர் ஒன்றியமும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மாணவர்களிடையே விசாரணை மேற்கொண்டால் அதனை மாணவர் நலன் கருதி குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளுமாறும், தனிப்பட்ட ரீதியில் மாணவர்களை தண்டிப்பதை விடுக்குமாறும் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
தரமான மருத்துவ சிகிச்சை : முன்னணி நாடுகளின் பட்டியல் வெளியீடு!
வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்த போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோ...
சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது - அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது - ஈ.பி.டி.பியின் ஊடக பேச்ச...
|
|
|


