கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறை – ஒரு இலட்சம் ரூபா அபராதம் – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி தீர்ப்பு!
Thursday, March 28th, 2024
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
டிசெ. 31 ஆம் திகதி காணி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா - காணிப்பதிவாளர் ச.குணாஜினி!
கடன் சான்றுப் பத்திரங்களை விடுவிப்பதில் பிரச்சினை - உர இறக்குமதியில் தாமதம் என தேசிய உர செயலகம் தெ...
அவல நிலைக்கு உள்ளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் ...
|
|
|


